பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு
பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியில் வாரம்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார்கள் ஏலம் நடக்கிறது. இதில், விற்பனை செய்வதற்காகபொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள், தூத்துக்குடி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது.நேற்று வரத்து அதிகரித்தது.
1 300 வாழைத்தார்கள் விற்பனைக்குகொண்டுவரப்பட்டது. ஏலத்தில் (கிலோ கணக்குபடி) நேந்திரம் ரூ.24,பூவன் ரூ.15 முதல் ரூ.23, செவ்வாழை ரூ.28 முதல் ரூ.34. கதளிரூ.27 முதல் ரூ.33. மோரீஸ் ரூ.15, ரஸ்தாளி ரூ.27, கற்பூரவள்ளி ரூ.23 எனவிலைபோனது.
இதுகுறித்து வாழைத்தார்விற்பனை வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாரம்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வாழைத்தார் ஏலத்திற்கு 600 முதல் 800 வாழைத்தார்கள் விற்பனைக்கு வரும். இன்று (நேற்று) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1300 தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த வாரத்தைவிட ஏலத்தில் கிலோவிற்கு சராசரியாக ரூ.3 வரை வாழைப்பழம் விலைஉயர்ந்து இருந்தது என்றனர்.
Related Tags :
Next Story