கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்தல்
கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்தல்
கிணத்துக்கடவு
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர், மாநிலத் துணைத் தலைவர், மாநில செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், ஜானகி ராமன், துணைத்தலைவர் பதவிக்கு நல்லா கவுண்டன், ரகுவரன், 2 செயலாளர்கள் பதவிகளுக்கு சர்தார், தியாகராஜன், விஸ்வநாதன், அரங்க வீரபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாநில அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு அந்தந்த மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது.
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓட்டுப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. கிணத்துக்கடவில் ஆனந்தகுமார், சுதானந்தா சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்தல் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை காண்பித்து ஓட்டுப்போட்டனர். கிணத்துக்கடவில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
Related Tags :
Next Story