மண்சோறு சாப்பிட்டு ரசிகர்கள் வழிபாடு
ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி மண்சோறு சாப்பிட்டு ரசிகர்கள் வழிபாடு நடத்தினர்.
திருப்பரங்குன்றம்,
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி பூரண குணமடைய வேண்டும் என்று வெயிலு உகந்த அம்மன் கோவில் வாசல் முன்பு ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நூதன வழிபாடு செய்தனர்.முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் அண்ணாத்தா படம் வெற்றிபெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு குமரவேல், மதுரை மாநகர் ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், நகர செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story