வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது - 42 பவுன் நகை மீட்பு


வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது - 42 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 5:55 AM IST (Updated: 1 Nov 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 பவுன் நகை மீட்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கிடைத்த தகவலின்பேரில் ஏனாத்தூர், மேட்டுத்தெருவை சேர்ந்த டில்லிபாபு (வயது 40), பல்லவர்மேடு மேற்கு பகுதியை சேர்ந்த காளிதாஸ் (27), முருகன் (23) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் வழிப்பறி மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 42 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

Next Story