கும்மிடிப்பூண்டி அருகே பொக்லைன் எந்திரம் மோதி லாரி டிரைவர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே பொக்லைன் எந்திரம் மோதி லாரி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 1 Nov 2021 12:59 PM IST (Updated: 1 Nov 2021 12:59 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பொக்லைன் எந்திரம் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தார்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43), லாரி டிரைவர். இவர் நெய்வேலியில் இருந்து லாரியில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே உள்ள சித்தூர் நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலைக்கு வந்தார்.நேற்று காலை சேமிப்பு குடோனில் நிலக்கரியை இறக்கி கொண்டிருந்தபோது, லாரியை விட்டு மகேந்திரன் இறங்கி கீழே நின்று கொண்டிருந்தார். அங்கு நிலக்கரியை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story