வரி வசூலிக்கும் திறனை அதிகரித்து நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும்

வரி வசூலிக்கும் திறனை அதிகரித்து நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும்
கோவை
மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வரி வசூலிக்கும் திறனை அதிகரித்து நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் அறிவுறுத்தினார்.
பயிலரங்கம்
கோவை மாநகராட்சி சார்பில் வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு முனிசிபல் பிரிமீயர் லீக் நடத்தப்படுகிறது.
இதன்படி மாநகராட்சி விதிக்கும் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த பயிலரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். பயிலரங்கை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன்
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது
இந்திய அளவில் வேகமாக வளர்கிற 2 அடுக்கு நகரங்களில் கோவை யும் ஒன்று. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் படி கோவை மாநகரில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
தற்போது மக்கள் தொகை 28 லட்சத்தை கடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நிதி ஆதாரம்
எனவே அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ளதை பராமரிக்கவும் போதுமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் வரி வசூலிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வருவாயை மேம்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் வரி செலுத்தும் பழக்கத்தை பொதுமக்களிடம் அதிகரிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட்டு,
கோவை மாநகரம்தான் இந்தியாவில் தலைசிறந்த மாநகரம் என்று எல்லோரும் போற்றி பாராட்டுகின்ற வகையில் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






