இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வேலை வாய்ப்புக்கு உதவும்


இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வேலை வாய்ப்புக்கு உதவும்
x
தினத்தந்தி 1 Nov 2021 8:41 PM IST (Updated: 1 Nov 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வேலை வாய்ப்புக்கு உதவும்

கோவை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வேலைவாய்ப்புக்கு உதவும் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் கூறினார்.

வன்னியர் இடஒதுக்கீடு ரத்து

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, வன்னியர்க ளுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

இது குறித்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்ட மைப்பு தலைவர் வெ.ரத்தினசபாபதி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு நடை முறைப்படுத்தியது. 
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 137-க்கும் மேலான சமுதாயத்தினர் உள்ள நிலையில், இன்னும் பல சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. 

ஆனால் ஒரு சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தால் அது மற்ற சமுதாயத்தை பாதிக்கும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். எங்களது சட்ட போராட்டத்துக்கு முழு வெற்றி கிடைத்து உள்ளது.

சட்டப்படி எதிர்கொள்வோம்

அரசியல் அமைப்பு சட்டம் மீறப்பட்டதாக கூறி இந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இதற்காக வாதிட்ட வக்கீல்களை பாராட்டுகிறோம்.

ஐகோர்ட்டு மதுரைகிளை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பிலோ, அல்லது வன்னியர் சமுதாயத்தின் சார்பிலோ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
-

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் அரசியல் சுயநலத்துக்காக நடை முறைப்படுத்தியதையும் சுட்டி காட்டுவோம். 

இன்னும் 2 ஆண்டுகளில் அரசு பணிகளில் 60 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இப்போது கூறப்பட்ட தீர்ப்பு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் வேலை வாய்ப்புக்கு உதவும்.

உதாரணமாக தற்போது உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் 146 பணியிடத்துக்கான அரசு பணியில், வன்னிய சமுதாயத்துக்கு மட்டும் 12 இடங்கள் ஒதுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை இனி மாறும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story