கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 8:45 PM IST (Updated: 1 Nov 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இது பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். 

இதில், அன்னூர் பகுதியில் அக்கரைசெங்கபள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கலூர், இலுப்பநத் தம், பள்ளிபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் தொழிற்பேட்டை அமைக்க

 3800 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரி டம் தனித்தனியாக மனு கொடுக்க விரும்புவதாக கூறி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அங்கு கலெக்டர் இல்லாததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், ஆர்.டி.ஓ. (வடக்கு) ரவிச்சந்திரன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள், அவர்களிடம்  கோரிக்கை மனுக்களை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். 

இது தொடர்பாக விவசாயி ரவிக்குமார் என்பவர் கூறுகையில், அன்னூர் வட்டாரத்தில் 3800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைத்தால் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

 எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

Next Story