கோவையில் 135 டாஸ்மாக் பார்கள் திறப்பு
கோவையில் 135 டாஸ்மாக் பார்கள் திறப்பு
கோவை
கோவையில் 135 டாஸ்மாக் 'பார்கள்' திறக்கப்பட்டதை மதுபிரியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
‘பார்’ திறக்க அனுமதி
கொரோனா காரணமாக, கடந்த ஏப்ரல் 24-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 'பார்கள்' மூடப்பட்டன. தொற்று குறைந்ததால் கடந்த ஜூலை 5-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் குறைந்ததால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, டாஸ்மாக் பார்களை நேற்று முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. எனவே பார்களில் மேஜைகளை அடுக்கி தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
மதுபிரியர்கள்
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நேற்று முதல் 135 டாஸ் மாக் பார்கள் திறக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பார்களுக்கு வந்த மது பிரியர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்து பார்களில் அமர வைக்கப்பட்டனர்.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 'பார்களில்' அமர்ந்து மது குடிக்க அனுமதி வழங்கப்பட்டது. 'பார்' ஊழியர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து மது மற்றும் சிற்றுண்டி வினியோகம் செய்தனர்.
நிம்மதி
இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில், 'பார்கள்' பூட்டிக் கிடந்ததால் மதுபாட்டில்களை வாங்கி வீட்டிற்கு சென்று அருந்த முடியவில்லை. சாலையோரத்தில் நின்று மது குடிக்கும் நிலை இருந்தது. தற்போது 'பார்கள்' திறக்கப்பட்டு உள்ளதால், நிம்மதியாக அமர்ந்து மது குடிக்க முடிகிறது என்றனர்.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது
டாஸ்மாக் பார்களுக்கு வருபவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறை களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கில் 135, வடக்கில் 151, 7 எலைட் கடைகள் என 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மொத்தம் 199 கடைகளில் டாஸ்மாக் பார்கள் உள்ளன.
அனுமதி வழங்கப்படும்
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு டாஸ்மாக் 'பார்களுக்கு' அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது அந்த அனுமதி இந்த மாதம் (நவம்பர்) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை உரிமைத் தொகை செலுத்திய 135 'பார்களுக்கு' மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ளவர்கள் உரிமைத் தொகை கட்டினால் விரைவில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story