ரோட்டில் மரக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்
ரோட்டில் மரக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்
இடிகரை
கோவை பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவில் இருந்து சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.88 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அங்குள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story