நெகமம் காட்டன் சேலைகள் தேக்கம்
நெகமம் காட்டன் சேலைகள் தேக்கம்
நெகமம்
கொரோனா காரணமாக நெகமம் காட்டன் சேலைகள் விற் பனை குறைந்ததால் அதிகளவில் தேக்கம் அடைந்து உள்ளன. எனவே நிவாரணம் வழங்க நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெகமம் காட்டன் சேலை
கோவை மாவட்டம் நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியான குள்ளக்காபாளையம், வதம்பச்சேரி, பூரண்டாம்பாளையம், எஸ். அய்யம்பாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், காட்டம்பட்டி, என்.சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இங்கு கோரா மற்றும் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாக வும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். நெகமம் காட்டன் சேலை புகழ் பெற்றது என்பதால் அதை பலர் ஆர்வத்துடன் வாங்குவார்கள்.
ஏற்றுமதி முடங்கியது
எனவே இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், போன்ற வெளிமாநிலங் களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் பலகோடிக்கு வர்த்தகம் நடந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெளிமாநி லம் மற்றும் வெளிநாடுகளுக்கு காட்டன் சேலைகள் ஏற்றுமதி செய்வது முற்றிலும் முடங்கியது. இதனால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சேலைகள் தேக்கம்
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சேலைகள் உற்பத்தி செய்து அனுப்பப்படும். ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய தொகை சரிவர கிடைக்காததால் சேலைகள் உற்பத்தி செய்தாலும் அதை வெளியூர் அனுப்ப முடியாததால் அதிகளவில் தேக்கம் அடைந்து உள்ளன.
இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான சேலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த தீபா வளிக்கு அதில் 50 சதவீதம் மட்டுமே அனுப்பி வைத்தோம். இந்த நிலையில் கொரோனா காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்த சேலைகளுக்கான தொகையை வசூல் செய்ய முடியவில்லை.
ரூ.10 ஆயிரம் நிவாரணம்
எனவே இந்த தீபாவளிக்கும் சேலைகள் அனுப்பி வைக்க முடிய வில்லை. இதன் காரணமாக அதன் விற்பனை குறைந்ததால் ஏராளமான சேலைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் பலர் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலை நீடித்து உள்ளது.
எனவே கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த வியாபாரிகளின் கஷ்டநிலையை புரிந்து ஒவ்வொரு நெசவாளர் களுக்கும் தீபாவளியையொட்டி குறைந்த பட்ச நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும் ஜி.எஸ்.டி.யை வியாபாரிகள் முறையாக செலுத்தி உள்ளதால், தற்போது ஏற்பட்டு உள்ள இழப்பீட்டை சரிசெய்ய அதை திருப்பி வழங்குவதுடன், தகுந்த நஷ்டஈட்டையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story