சேறும் சகதியுமான சாலை
மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறைக்கு தார் சாலை செல்கிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
| சண்முகநாதன், மேட்டுப்பாளையம். |
போக்குவரத்து நெருக்கடி
| பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் வணிக நிறுவனங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். |
| கார்த்திக், மகாலிங்கபுரம் |
விபத்து ஏற்படும் அபாயம்
| பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். |
திறந்தவெளி பார்
| பொள்ளாச்சி ரெயில்நிலையம் எதிரே உள்ள நகராட்சி காலியிடம் மற்றும் ஏ.டி.பி. சாலை பகுதியில் இரவு நேரத்தில் ஆட்டோக்களை நிறுத்தி அவற்றை பாராக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| பாலசுப்பிரமணியம், பொள்ளாச்சி. |
குடிநீருடன் கலந்த கழிவுநீர்
| கோவை 25-வது வார்டு சிரியன் சர்ச் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீருடன் சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத தால், குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வினியோகிக்க வேண்டும். |
ஆட்டோக்களால் இடையூறு
| நீலகிரி மாவட்டம் தேவாலா பஜாரில் சாலை குறுகலாக உள்ளது. இங்கு சாலையோரத்தில் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சில நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே ஆட்டோக்களை அங்கு நிறுத்துவதை தடுப்பதுடன் வேறு பகுதியில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தெருநாய்கள் தொல்லை
| கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் கூட்டங்கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது சாலையின் குறுக்கே பாய்வதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அதிகரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். |
தெருவிளக்குகள் ஒளிருமா?
| கோவை விளாங்குறிச்சி காமராஜ் அவன்யூ பகுதியில் தெருவிளக்குகள் போடப்பட்டு உள்ளன. அந்த விளக்குகள் சில நாட்களாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதால் திருட்டு, வழிப்பறி நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும். |
| முத்துக்குமார், விளாங்குறிச்சி. |
சாக்கடை கால்வாய் வசதி
| கோவை வீரகேரளம் அண்ணா ஹவுசிங் யூனிட் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இங்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இங்கு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். |
தள்ளுவண்டிகளால் நெரிசல்
| வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பஜார் பகுதியில் சாலை ஓரத்தில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு எந்த வியாபாரமும் நடைபெறவில்லை. இந்த தள்ளுவண்டிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தள்ளுவண்டிகளை அகற்ற வேண்டும். |
வேகத்தடை வேண்டும்
| கோவை காந்திமாநகரில் இருந்து கணபதி மாநகரில் உள்ள பண்ணாரியம்மன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே சந்திப்பு பகுதி இருக்கிறது. இதில் பண்ணாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் வேகத்தடை உள்ளது. ஆனால் காந்திமாநகரில் இருந்து வரும் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். |
சாலையின் நடுவே ஆபத்தான குழி
| கோவை ராமநாதபுரம் 80 ரோட்டில் இருந்து சர்ச் ரோடு செல்லும் வழியில் சாலையின் நடுவே ஆபத்தான குழி உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த குழியில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் குழி இருப்பது தெரியாமல் அதில் சிக்கும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் ஆபத்தான அந்த குழியை மூட வேண்டும். |