வீடு புகுந்து திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது


வீடு புகுந்து திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 7:39 PM IST (Updated: 2 Nov 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

கருமத்தம்பட்டி

வீடு புகுந்து திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட் டார். அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டுக்குள் மர்ம நபர்கள்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது38). 

இவர் அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதை பார்த்து நிர்மலா அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அவர், அக்கம்பக்கத்தினர் மற்றும் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே வீட்டிற்குள் இருந்த மர்ம நபர்கள் மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு தப்பி செல்ல வெளியே வந்தனர். 

முன்னாள் போலீஸ்காரர் கைது

அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மர்ம நபர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடிக்க முயன்றனர். 

அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் முனீஸ்வரன் (வயது 35), இவர், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் என்ப தும்

 கோவைப்புதூர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றியதும், கடந்த 2017-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதானதால் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

கூட்டாளிக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் போலீஸ் காரரான முனீஸ்வரனை கைது செய்தனர். 

பின்னர் அவர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முன்னாள் போலீஸ்காரர் முனீஸ்வரன், செல்போன் திருட்டு வழக்கிலும், கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் குடியிருப்பு பகுதியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 2 மூதாட்டிகளிடம் நகை பறித்த வழக்கிலும் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story