கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை


கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Nov 2021 7:42 PM IST (Updated: 2 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

கோவை

இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாள்

இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனது வாசஸ்தலமான பரலோகத்துக்கு செல்ல வேண்டும். அதுதான் ஒரு மனிதனின் நிறைவாழ்வாகும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.  

கிறிஸ்தவர் இறந்தால் உடலை அடக்கம் செய்து கல்லறை கட்டுவார்கள். அவ்வாறு பலர் புதைக்கப்பட்ட இடம் கல்லறை தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் நாள்தான் கல்லறை திருநாள் அல்லது அனைத்து ஆன்மாக்களின் நாளாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

பிரார்த்தனை

இதையொட்டி நேற்று கோவை சுங்கம், புலியகுளம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் சுத்தம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

கல்லறைகளின் மீது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். 

இறந்தவர்களை நினைவுகளை நினைத்து உறவினர்கள் கண்கலங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் வந்தும் பிரார்த்தனை செய்தனர்.

இறந்தவர்களின் நினைவாக உறவினர்கள் சிலர், ஏழை-எளிய மக்களு க்கு உணவு, உடை வழங்கினர். 

கல்லறை திருநாளையொட்டி அந்த பகுதிகளில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு தங்களுக்கு தேவையான பூக்களை கிறிஸ்தவர்கள் வாங்கி சென்றனர்.

1 More update

Next Story