கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை


கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2021 8:47 PM IST (Updated: 2 Nov 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை மண்டல மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை, 
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை மண்டல மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவரம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா நடைமுறைகளை பின்பற்றி பாருக்குள் நுழைய வேண்டும். மேலும் அங்கு வரும் வாடிக்கை யாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். 
அவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்தும், முககவசம் அணிந்தும் தான் பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பாருக்குள் அனுமதி கிடையாது. மேலும் பாரில் பணிபுரிபவர்கள் கையுறை, முககவசம் அணிந்து தான் பணிபுரிய வேண்டும். இதில் கொரோனா விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மண்டல முதுநிலை மேலாளர் அருண்சத்யா தெரிவித்துள்ளார்.
ஆய்வு 
இந்த நிலையில் அவர் நேற்று மதுரையில் உள்ள பல்வேறு பார்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து இல்லாமல் பார் தனியாக செயல்பட்டு வருவதை கண்டு பிடித்தார். மேலும் டாஸ்மாக் கடையுடன் இணைந்து அதே கட்டிடத்தில் தான் பார் இயக்க வேண்டும் என்பது விதி. எனவே விதிகளை மீறி செயல்பட்ட அந்த டாஸ்மாக் பாரை மண்டல மேலாளர் அருண்சத்யா பூட்டி சீல் வைத்தார்.

Next Story