கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
வால்பாறை
இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை திருநாள்
இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனது வாசஸ்தலமான பரலோகத்துக்கு செல்ல வேண்டும். அதுதான் ஒரு மனிதனின் நிறைவாழ்வாகும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்தவர் இறந்தால் உடலை அடக்கம் செய்து கல்லறை கட்டுவார்கள்.
அவ்வாறு பலர் புதைக்கப்பட்ட இடம் கல்லறை தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் நாள்தான் கல்லறை திருநாள் அல்லது அனைத்து ஆன்மாக்களின் நாளாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
அதன்படி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதனால் வால்பாறையில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்த உற்றார், உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று அவற்றை சுத்தம் செய்து அதற்கு வர்ணம் பூசியதுடன், பூக்களால் அலங்கரித்தனர்.
பின்னர் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இறை வேண்டல் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வால்பாறை தூய இருதய ஆலயத்தின் பங்கு மக்கள் அங்குள்ள தூய இருதய கல்லறை தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நிறை வேற்றியதுடன் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து தூய இருதய ஆலயம் மற்றும் புனித லூக்கா ஆலய பங்கு குருக்கள் மரியஜோசப், சாஜி, ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.
Related Tags :
Next Story