பொள்ளாச்சி சந்தையில் ரூ 5 கோடிக்கு மாடுகள் விற்பனை
பொள்ளாச்சி சந்தையில் ரூ 5 கோடிக்கு மாடுகள் விற்பனை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் வரத்து அதிகரித்ததால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாட்டுச்சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி செவ்வாய்கிழமை என்பதால் சந்தை நடைபெற்றது.
சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வரத்து அதிகரிப்பு
கேரளாவில் இருந்து அதிகமாக வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். தொடர் மழை மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் நேற்று கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் மாடுகள் விற்பனை விறு, விறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
பொள்ளாச்சி சந்தைக்கு 2 ஆயிரம் மாடுகள் வரை கொண்டு வரப்பட்டன. மேலும் விற்பனையும் அதிகரித்து இருந்தது. காங்கேயம் காளை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை, நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை, நாட்டு எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை, மொரா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 வரை, செர்சி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விலை போனது.
வழக்கமாக செவ்வாய்கிழமை ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். ஆனால் நேற்று ரூ.5 கோடி வரை வர்த்தகம் அதிகரித்து இருந்தது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story