வாடிப்பட்டி சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது
தீபாவளி பண்டிகையையொட்டி வாடிப்பட்டி சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது.
வாடிப்பட்டி,
தீபாவளி பண்டிகையையொட்டி வாடிப்பட்டி சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது.
தீபாவளி
வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. இந்த வாரச் சந்தையில் காய்கறிகள், ஆடு, மாடு, கோழி விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் கிராமப் புறங் களில் இருந்தும் ஆடு, மாடுகள், வருவது வழக்கம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் ஆடுகள் வளர்ப்பவர்கள் தீபாவளி பண்டிகைக்கு விற்பதற்காகவே தனி கவனம் செலுத்தி ஆடுகளை வளர்த்து வருவது வழக்கம். இதில் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக்காலங்களில் ஆடு, கோழி விற்பனை சூடுபிடிக்கும்.
வரத்துகுறைவு
இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறியாடு, கருப்பாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் குறைந்தபட்சம் 10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை ஆடு விற்பனை ஆனது. மேலும் நாட்டுக் கோழி, ஒட்டு நாட்டுக்கோழி, கிரிராஜா உள்ளிட்ட 7 வகையான கோழிகளும் விற்பனையானது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால் சுற்றுப்புற பகுதிகளில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரசந்தைகள் மாற்றி செவ்வாய்க்கிழமை நடத்தியதால் வாடிப்பட்டி சந்தைக்கு ஆடுகளின் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story