விபத்தில் 2 வாலிபர்கள் பலி
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மொபட் மோதியது
மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 38). சம்பவத்தன்று இவர் மொபட் வண்டியில் உத்தங்குடி ரோட்டில் வேகமாக சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் நிலைதடுமாறு ரோட்டின் நடுகே உள்ள தடுப்பு சுவர்மீது மொபட் மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே காசிமாயன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகனம் மோதியது
நாகமலைபுதுக்கோட்டை அருகே விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நாகேந்திர பிரசாத்(வயது 28). இவர் நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து நாகமலைபுதுக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சீனிவாசா காலனி மொட்டமலை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயமடைந்த நாகேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story