வால்பாறையில் மரம் விழுந்து கார் சேதம்


வால்பாறையில் மரம் விழுந்து கார் சேதம்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:37 PM IST (Updated: 3 Nov 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மரம் விழுந்து கார் சேதம்

வால்பாறை

வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த கடந்த 3 நாட்களாக  விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. 

நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. அப்போது வால்பாறை அருகில் உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் அரசு ஆஸ்பத்திக்கு செல்லும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயன் என்பவரின் காரின் மீது மரம் சாய்ந்து விழுந்தது. 

இதில் காரின் கண்ணாடி உள்ளிட்டவை சேதம் அடைந்தன. சாலையில் மரம் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. 

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story