பொள்ளாச்சி சந்தையில் ஆடு, நாட்டு கோழிகள் விற்பனை மும்முரம்


பொள்ளாச்சி சந்தையில் ஆடு, நாட்டு கோழிகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:37 PM IST (Updated: 3 Nov 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சந்தையில் ஆடு, நாட்டு கோழிகள் விற்பனை மும்முரம்

பொள்ளாச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடு, நாட்டு கோழிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆட்டுச்சந்தை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை மற்றும் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் ஒரு நாளைக்கு முன்பாக நேற்று சந்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

 தீபாவளி பண்டிகையின் போது அசைவ உணவு சாப்பிட இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் பொள்ளாச்சியில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது.

சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், உடுமலை தாராபுரம், பூளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 

தீபாவளி பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடந்த வாரத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனை ஆனது. இதேபோன்று நாட்டுக்கோழிகள் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி சந்தைக்கு வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நாளை (இன்று) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், கடந்த வாரம் நடந்த சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் 1300 ஆடுகள் வரை வந்தன.

 இந்த வாரம் 600 ஆடுகள் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் விற்பனை ஆன ஆடுகள், இந்த வாரம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 

இதேபோன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுசேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story