வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 3 Nov 2021 11:03 PM IST (Updated: 3 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

போடியில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

போடி: 



போடி டி.வி.கே.கே. நகரை சேர்ந்த முருகன் மகன் பிரபாகரன் (வயது27). இவருக்கும் போடி புதூரை சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு அருகே பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த தங்கபாண்டி அவருடன் தகராறு செய்தார். பின்னர் பிரபாகரனை அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Next Story