திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடி 40 நாட்களில் கிடைத்தது
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடி 40 நாட்களில் கிடைத்தது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 343 வசூலாகி இருந்தது. மேலும் 435 கிராம் தங்கம், 5 கிலோ 350 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக கிடைத்தன. இந்த காணிக்கை 40 நாட்களில் கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story