ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்


ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர்
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேலூர் குப்பம் ஊராட்சி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குமாரி (41). மகள்கள் வித்யா(24), சாந்தி (21). இவர்களில் வித்யாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். வெங்கடேசன் கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றி வெங்கடேசன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மனைவி குமாரியின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த குமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பயந்து போன வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story