வால்பாறையில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை


வால்பாறையில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை
x
தினத்தந்தி 5 Nov 2021 7:33 PM IST (Updated: 5 Nov 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை

வால்பாறை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து வால்பாறையில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. 

விழிப்புணர்வு ஒத்திகை

வால்பாறையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கி உள்ளது. இதையடுத்து இதனை எதிர்கொள்வது குறித்தும், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவதற்கான காலசூழ்நிலை நிலவுவதாலும் கோவை மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி வால்பாறையில் தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய கூழாங்கல் ஆற்றில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள். 
தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையிலும் வால்பாறை போலீசார் முன்னிலையிலும் கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி பொது மக்களுக்கு ஆற்றில் எவ்வாறு பாதுகாப்பாக குளிக்க வேண்டும். ஆற்றில் சுழல் உள்ள இடங்களில் இறங்கி குளிக்க கூடாது. 

முதலுதவிகள்

ஆபத்து நிறைந்த இடங்களில் இறங்க கூடாது. ஆற்றில் யாராவது அடித்துச் செல்லப்படும் போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்தும் தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து செயல்முறை மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். கூழாங்கல் ஆற்று பகுதியில் போலீஸ் கூண்டு அமைத்து பாதுகாப்பு பணியில் போலீஸ்சாரை ஈடுபடுத்தி ஒலி பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story