கருமத்தம்பட்டி அருகே திருட்டு குறித்து தகவல் கொடுத்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி. நேரில் பாராட்டு


கருமத்தம்பட்டி அருகே திருட்டு குறித்து தகவல் கொடுத்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி. நேரில் பாராட்டு
x
தினத்தந்தி 5 Nov 2021 10:30 PM IST (Updated: 5 Nov 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கருமத்தம்பட்டி அருகே திருட்டு குறித்து தகவல் கொடுத்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி. நேரில் பாராட்டு

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியில் கடந்த 1-ந் தேதி இரவு நிர்மலா (வயது 40) என்பவரின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து திருடிக் கொண்டு இருந்தனர். அந்த சத்தத்தை கேட்டு அருகில் உள்ள நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடுவது தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் ஆயுதப்படை காவலர் முனீஸ்வரன் என்பவரை பொதுமக்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்தனர். மற்றொரு நபர் தப்பி சென்றார்.

இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவிக்க டி.ஐ.ஜி முத்துசாமி சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் வந்தார். 

அப்போது, அவர் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி  மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கி பாராட்டினார்.

Next Story