தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 2 நாட்களில் ரூ.34 கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 2 நாட்களில் ரூ.34 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 5 Nov 2021 10:31 PM IST (Updated: 5 Nov 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் 2 நாட்களில் ரூ.34 கோடிக்கு மது விற்பனை

கோவை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அமோகமாக நடக்கும். இதேபோல் கடந்த புதன்கிழமை மாலை முதல் மதுபிரியர்கள், தங்களுக்கு பிடித்த மதுவகைகளை டாஸ்மாக் கடையில் இருந்து போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் வாங்கி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.4 கோடி வரை மது விற்பனை இருக்கும். இந்த நிலையில் தீபாவளியையொட்டி அதன் முந்தைய நாளில் (புதன்கிழமை) ரூ.17.51 கோடிக்கும், தீபாவளியன்று (வியாழக்கிழமை) ரூ.16.19 கோடிக்கும் மதுபானங்கள் விற்பானையாகி உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மண்டலத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கில் 135, வடக்கில் 151 மற்றும் 7 எலைட் கடைகள் என 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மொத்தம் 130-க்கும் மேற்பட்ட கடைகளில் டாஸ்மாக் பார்களுடன் இயங்கி வருகின்றன.

கோவை தெற்கில் கடந்த புதன்கிழமை ரூ.7.51 கோடிக்கும், தீபாவளியன்று (வியாழக்கிழமை) ரூ.7.69 கோடிக்கும், கோவை வடக்கில் கடந்த புதன்கிழமை ரூ.10 கோடிக்கும், நேற்று முன்தினம் தீபாவளியன்று (வியாழக்கிழமை) ரூ.8.50 கோடிக்கும் என 2 நாட்களில் மட்டும் ரூ.33.70 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது. இதேபோல் கோவை மண்டலத்தில் தீபாவளியன்று ஒரே நாளில் ரூ.37.71 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

கொரோனா காரணமாக 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபார்களும், கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டதால் மது விற்பனை அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story