தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசியில் ரூ.15½ கோடிக்கு மது விற்பனை
நெல்லை, தென்காசியில் ரூ.15½ கோடிக்கு மது விற்பனை
நெல்லை:
தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 98 கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளும் என மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களிலும் மொத்தம் ரூ.15 கோடியே 51 லட்சத்துக்கு மது விற்பனை ஆனது.இதில் நெல்லை மாவட்டத்தில் தீபாவளி அன்று ரூ.4.05 கோடியும், அதற்குற்கு முந்தைய நாளில் ரூ.3.68 கோடியும் என மொத்தம் ரூ.7 கோடியே 73 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் தீபாவளி அன்று ரூ.4.28 கோடிக்கும், முந்தைய நாளில் ரூ.3.50 கோடிக்கும் என மொத்தம் ரூ.7 கோடியே 78 லட்சத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story