சுங்குவார்சத்திரம் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி - மோட்டார் சைக்கிள் நிறுவன மேலாளர் கைது
சுங்குவார்சத்திரம் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த மோட்டார் சைக்கிள் நிறுவன மேலாளர் கைது
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனதில் மனித வள மேலாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியில் வசிக்கும் தரணிகுமார் என்பவரிடம் தான் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சத்து 20 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக வேலை கேட்டும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து் சுங்குவார் சத்திரம் போலீசில் தரணிகுமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தனசேகரனை கைது செய்தார்.
பின்னர் அவரை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story