கோவையில் 99 பேருக்கு கொரோனா
கோவையில் 99 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் 99 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு 100-க்கும் கீழ் சென்று உள்ளது.
99 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுவே நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 431 ஆக உயர்ந்தது. மேலும் கொரோனா தொற்று பிடியில் இருந்து 126 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
3 பேர் பலி
இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 59, 55 வயதுடைய ஆண்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது முதியவர் என 3 பேர் பலியாகினர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,428 ஆக அதிகரித்தது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1179 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 மாதங்களுக்கு பிறகு...
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஒரேநாளில் 81 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாள் 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன்பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் குறையாமல் சென்றது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 99 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதனால் 8 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 100-க்கும் கீழ் சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story