மசக்காளிபாளையம் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிடும் மர்ம ஆசாமி
மசக்காளிபாளையம் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிடும் மர்ம ஆசாமி
கோவை
கோவை ஹோப் காலேஜை அடுத்த மசக்காளிபாளையம் சாலையில் லால்பகதூர் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள வீடுகளை கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு வருகிறார்.
இதற்காக அந்த ஆசாமி பாலன் நகர் அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு நடந்து சென்று வீடுகளை நோட்டமிடுகிறார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
மேலும் அங்குள்ள தங்கும் விடுதியை ஒட்டிய சுவரில் ஏறிக் குதித்து உள்ளே சென்று விட்டு ஒரு மணிநேரம் கழித்து வெளியே வருகிறார். இதுபோல் அந்த நபர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டு அதிகாலையில் வெளியே வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களாக அந்த மர்ம நபர் வீடுகளை நோட்டமிடும் வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே குற்றசம்பவங்கள் நடைபெறும் முன்பு மர்ம ஆசாமியை பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story