அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கள்ளக்காதலியை பிரிய மனமின்றி புதுமாப்பிள்ளை தற்கொலை


அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கள்ளக்காதலியை பிரிய மனமின்றி புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2021 10:15 PM IST (Updated: 6 Nov 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கள்ளக்காதலியை பிரிய மனமின்றி புதுமாப்பிள்ளை தற்கொலை

கணபதி

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கள்ளக்காதலியை பிரிய மனமின்றி புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 32). போட்டோகிரபர். இவர், கோவை சிவானந்தாகாலனி சாஸ்திரி ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்தார். இவர், சில வருடங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு புகைப் படம் எடுக்க சென்றார்.

அப்போது அவருக்கு, கணவரை பிரிந்து வாழும் 27 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் கள்ளக்காத லாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். 

புதுமாப்பிள்ளை

இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர். இந்த நிலையில் மனோஜூக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், மனோஜூக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். 

அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர். இந்த நிலையில் மனோஜ், தனது கள்ளக்காதலியை விட்டு பிரிவதா? பெற்றோர் பார்த்து முடிவு செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதா? என்று கடந்த சில நாட்களாக மனக்குழப்பத்தில் இருந்தார்.
 
தற்கொலை

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மனோஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story