மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
தினத்தந்தி 6 Nov 2021 10:16 PM IST (Updated: 6 Nov 2021 10:16 PM IST)
Text Sizeமூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
கோவை
கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 62). இவர் ராமலிங்க வீதி வழியாக வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விஜயலட்சுமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மூதாட்டி, சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire