சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Nov 2021 11:54 PM GMT (Updated: 6 Nov 2021 11:54 PM GMT)

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1,312-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

Next Story