படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22). இவர் கடந்த 1-ந்தேதி ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயராமன் கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் கேல்முத்தூகூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 20), என்பது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜெயராமன் கொலை சம்பவத்தில் இவருக்கு தொடர்புள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரசாந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story