குடும்ப பிரச்சினையில் வடமாநில தொழிலாளி தற்கொலை


குடும்ப பிரச்சினையில்  வடமாநில தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 7 Nov 2021 3:14 PM IST (Updated: 7 Nov 2021 3:14 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமீத் பகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கிரானைட் தொழிற்சாலையின் ஊழியராக வேலை செய்து வந்தவர் அமீத் பகாரி (வயது 19). மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

இவர்களில் அமீத் பகாரி தான் தங்கியிருந்த வீட்டில் உள்ள மின்விசிறியில் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு செல்போன் பேசிக்கொண்டிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. அமீத் பகாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்ததிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூணடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story