தொழிலாளி கொலையில் 5 பேர் சிக்கினர்


தொழிலாளி கொலையில் 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Nov 2021 8:29 PM IST (Updated: 7 Nov 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி கொலையில் 5 பேர் சிக்கினர்

கணபதி

சமூக வலைத்தளத்தில் சவால் விட்டு பதிவிட்ட தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

சவால் பதிவு

கோவை கணபதியை அடுத்த காந்திமாநகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 28). தொழிலாளி. இவர் தனது மனைவி கவுசல்யா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். 

இதற்கிடையே அசோக்குமார் தனது இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு சவால் விடும் வகையில் வாசகங்களை எழுதி இருந்தார். இதனால் அவருடைய எதிர்கோஷ்டியினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்ற ஒர்க் ஷாப் மணி, அவரது நண்பர் விக்கு என்ற சண்முகம் ஆகியோர் அசோக்குமாரிடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டனர்.

சரமாரி கத்திக்குத்து

உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அசோக்குமாரை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அசோக்குமார் காந்திமா நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார். 

அப்போது அவரை மணிகண்டன், விக்கு என்ற சண்முகம் உள்பட 5 பேர் கொண்ட கும்பல்  பின்தொடர்ந்து வந்தது. 


பின்னர் அவர்கள் திடீரென்று அசோக்குமாரை சரமாரியாக கத்தி யால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

5 பேர் கைது

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். 

இதையடுத்து அசோக்குமாரை கொலை செய்த வழக்கு தொடர்பாக கோவை புலியகுளத்தை சேர்ந்த விக்கு என்ற சண்முகம் (24), கீரணத்தத்தை சேர்ந்த சந்தோஷ் (23) சரவணம்பட்டி யை சேர்ந்த பாபு (24), அமர்நாத் (25), கணபதியை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story