கந்தசஷ்டி திருவிழா
சோலைமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 16 வகை மலர்களால் சாமிக்கு சண்முகார்ச்சனை நடந்தது.
அழகர்கோவில்,
சோலைமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 16 வகை மலர்களால் சாமிக்கு சண்முகார்ச்சனை நடந்தது.
திருவிழா
மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது.அன்னம், காமதேனு, யானை போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி தினமும் புறப்பாடு நடந்தது. நேற்று 4-ம் திருவிழாவில் யாகசாலை பூஜைகளும், பின்னர் உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வலம்வந்தார்.
அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் வள்ளி தெய்வானை, சண்முகருக்கு ரோஜா, மல்லிகை, முல்லை, மல்லிகை, வில்வம், சம்மங்கி உள்ளிட்ட 16 வகையான 6 கூடை மலர்களால் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சண்முகார்ச்சனை நடத்தினர். பின்னர் 6 சர விளக்குகளால் தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மூலவர் சாமிகளுக்கும், வித்தக விநாயகர், வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சூரசம்ஹாரம்
5-ம் திருநாளில் சப்பர வாகனத்தில் சுவாமி புறப்பாடும் வழக்கம் போல் பூஜைகளும் நடைபெறும். நாளை (9-ந்் தேதி) 6-ம் திருநாள் காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதில் வெள்ளி மயில்வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அசுரனை வதம் செய்தல் நடைபெறும். 10-ந் தேதி 7-ம் திருநாள் அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இத்து டன் கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story