தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள கூமாட்சி மலையில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து அடிக்கடி தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோசப், சேத்தூர்.
சாலை தேவை
மதுரை அனுப்பானடியிலுள்ள கிருஷ்ணாமணி நகர் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அதில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு சாலை அமைக்க வேண்டும்.
கோகுல், மதுரை.
வேகத்தடை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பண்ணையார்புரம் ஆர்ச் நான்குமுனை சந்திப்பு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இப்பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இங்கு வேகத்தடை அமைப்பார்களா?
ஸ்டீபன், ராஜபாளையம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளமோர்க்குளத்தில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் தற்போது பெய்த மழை காரணமாக தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துச்சாமி, பள்ளமோர்க்குளம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சியில் பாலையம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுப்புராஜ், அருப்புக்கோட்டை.
பகலில் எரியும் விளக்கு
மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சிவா, மதுரை.
Related Tags :
Next Story