தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி


தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 7 Nov 2021 8:33 PM GMT (Updated: 7 Nov 2021 8:33 PM GMT)

தாளவாடி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் புலி, சிறுத்தை ஆகியவை கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்து கொன்றுவிடுகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நடந்து உள்ளது. 
தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டு தோட்டத்துக்கு மர்ம விலங்கு திடீரென வந்து உள்ளது. அவரை கண்டதும் உடனே அந்த விலங்கு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது புலியின் கால் தடம் என உறுதியானது. கிராமத்துக்குள் புலி புகுந்ததை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். 

Related Tags :
Next Story