கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். அவர்கள் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையிலும் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொடிவேரி அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்தனர்.
இதனால் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
Related Tags :
Next Story