செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு


செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2021 5:26 PM IST (Updated: 8 Nov 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று மண்ணிவாக்கம் ஊராட்சி எல்லை முடியும் பகுதியிலுள்ள அடையாறு கால்வாய்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து விட்டுவிட்டு அவ்வப்போது பல்வேறு ஊர்களில் கனமழை பெய்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரப்பி வருகிறது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் நேற்று மண்ணிவாக்கம் ஊராட்சி எல்லை முடியும் பகுதியிலுள்ள அடையாறு கால்வாய்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அடையாறு கால்வாய்களில் தண்ணீர் தேங்காமல் தொடர்ந்து செல்கிறதா? என்பதை அடிக்கடி பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், சசிகலா, மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற செயலர் ராம பக்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story