மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு
சுல்தான்பேட்டை ஒன்றியம் தாளக்கரையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மயிலாத்தாள் (32). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்புமயிலாத்தாள் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சலவ நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கோபித்துகொண்டு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்து குடிபோதைக்கு செல்வராஜ் அடிமையாகி உள்ளார். இதனிடையே நேற்று காலை செல்வராஜ் வீடு நீண்ட நேரம் ஆகியும், திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது செல்வராஜ் வீட்டின் விட்டத்தில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story