நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 2153 வாக்குச்சாவடிகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 2153 வாக்குச்சாவடிகள்
கோவை
கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 2,153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களி லும் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, வாக்குச்சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது
2,153 வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகராட்சியில் 1,290, மேட்டுப்பாளையம் நகராட்சியில் 69,
பொள்ளாச்சி நகராட்சியில் 89, வால்பாறை நகராட்சியில் 73, 33 டவுன் பஞ்சாயத்துகளில்-632 என கோவை மாவட்டத்தில் மொத்தம் 2,153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
4 புதிய நகராட்சிகள்
தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் கவுண்டம்பாளையம், காரமடை ஆகிய 4 புதிய நகராட்சி களில் எல்லை மறுவரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் உள்ளது.
எனவே அந்த 4 நகராட்சிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெறாது என்று கூறப்படுகிறது.கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிவடைய உள்ளது.
Related Tags :
Next Story