நம்பியூர் பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன
நம்பியூர் பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.
நம்பியூர் பகுதியில் தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.
தொடர் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது வீடு தொடர் மழை காரணமாக வலுவிழந்து காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அவரது வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்தது.
வீடுகள் இடிந்தது
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் என்பவரின் வீட்டு மண் சுவரும் இடிந்தது. மேலும் உடையக்கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்த அற்புதமேரி, மயிலாத்தாள் ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்தன. சம்பவம் நடந்தபோது 4 வீடுகளிலும் யாரும் இல்லை. இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இவற்றின் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து அங்கு சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
பவானி
பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சங்கரகவுண்டன்பாளையம் பழைய காலனி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதுபற்றி அறிந்ததும், தொட்டிபாளையம் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் அங்கு சென்று மழை நீரை வெளியேற்றினர்.
Related Tags :
Next Story