pugar petti
தினத்தந்தியின் pugar petti
பழுதடைந்த ரோடு
கோபி மார்க்கெட் வீதி முதல் வாய்க்கால் வீதி வரை செல்லும் ரோட்டில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. இதில் ரோட்டின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொதுமக்கள், கோபி
ஆபத்தான மின்கம்பம்
ஈரோடு கனிராவுத்தர் குளம் 4-வது குறுக்கு வீதியில் மின்கம்பம் உள்ளது. இது எந்நேரமும் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். இதேபோல் அதன் அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்தின் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. உடனே ஆபத்தான நிலையில் காணப்படும் 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கனிராவுத்தர் குளம்.
குடிநீாில் கழிவுநீர்
ஈரோடு ஜீவானந்தம் ரோடு குயவன் திட்டு மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் உள்ளது. இதிலிருந்து வரும் குடிநீரில் கடந்த 3 நாட்களாக கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள். நீருடன் கலந்து கழிவுநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே அப்பகுதி மக்களுக்கு சுகாதார முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெ.ஆனந்தன், ஜீவானந்தம் சாலை குயவன் திட்டு.
சாக்கடை வசதி
ஈரோடு நசியனூர் ரோட்டில் போஸ்டல் நகர் அருகே பட்டறை எதிரில் சாக்கடை வசதி இல்லை. இதனால் சாக்கடை நீருடன் மழை நீர் ரோட்டில் கலந்து ஆறு போல் ஓடுகிறது. இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.லோகநாதன், வெட்டுக்காட்டுவலசு.
சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
அந்தியூரை அடுத்த அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஆசிரிய ஆசிரியைகளுக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் சுகாதார வளாகங்கள் புதிதாக கட்டப்பட்டன. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டும் சுகாதார வளாகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சுகாதார வளாகங்களை திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், அத்தாணி.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் அந்தியூர் - பவானி மெயின் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் செம்புளிச்சாம்பாளையம் முருகன் கிணறு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து காட்டுப்பாளையம் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து உள்ளதால் ரோட்டில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் ெசல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காட்டுப்பாளையம்.
Related Tags :
Next Story