ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தவர் கைது


ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2021 1:59 AM IST (Updated: 9 Nov 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, பாரதிநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகனுக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக காமராஜர் சாலை, வடிவேல் நகரை சேர்ந்த சங்கர் (வயது 52) மற்றும் பல்கலைக் கழக ஊழியர் பார்த்தசாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  அதனை நம்பி சக்திவேல் மதுரை மாவட்ட கோர்ட்டு பகுதியில் வைத்து ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.  இது குறித்து சக்திவேல் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story