வைகை ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவன் உடல் மீட்பு


வைகை ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவன் உடல் மீட்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 2:03 AM IST (Updated: 9 Nov 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கும்போது மூழ்கிய ஒரு மாணவர் உடல் மீட்கப்பட்டது.

வாடிப்பட்டி, 
பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கும்போது மூழ்கிய ஒரு மாணவர் உடல் மீட்கப்பட்டது. 
திருவிழா
 திருப்பூரை சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வநாதன் (வயது 21) சி.ஏ., படித்து வந்தார். சிவகுமார் மகன் அருள் வசந்த் (18). இவர் பிளஸ்- 2 படித்துவந்தார். இவர்கள் 2 பேரும் பரவையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது விளாங்குடியை சேர்ந்த சரவணகுமார் (19) என்பவருடன் பரவை-துவரிமான் வைகை ஆற்றுப்பாலம் அருகில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஸ்வநாதனும் அருள் வசந்தும் ஆற்று நீரில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டனர். 
 கடந்த 2 நாட்களாக தல்லாகுளம், திடீர்நகர், சோழவந்தான் ஆகிய 3 தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் இளைஞர்கள் உள்பட சுமார் 53 பேர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று  காலை 6 மணியில் இருந்து தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது. இதில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் 2 படகுகளில் மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
ஆய்வு
 மாலை 4 மணிக்கு கோச்சடை அருகே முள்புதருக்குள் சிக்கியிருந்த அருள் வசந்த் உடல் மீட்கப்பட்டது. இன்று மீண்டும் மற்றொரு மாணவனை தேடும் பணி நடக்கிறது. இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் மீட்கப்பட்ட மாணவன் அருள் வசந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story