புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வேகத்தடை தேவை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம் சாலை, தென்வயல் சாலை, போலீஸ் நிலையம் மேற்கு சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இங்கு வேகத்தடை இல்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, இப்பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-அய்யர், எம்.கல்லுப்பட்டி.
மின்வெட்டு
சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம், ஆறாவயல், பேராட்டுக்கோட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முதியவர்களும், நோயாளிகளும் இரவில் மின்சாரம் இல்லாமல் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-பெரியசாமி, சண்முகநாதபுரம்.
உடைந்த பயணிகள் நிழற்குடை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவில் அலமேலுமங்கைபுரம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மேற்கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் அச்சத்துடன் தான் வருகின்றனர். அந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற நிலை உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடை கட்டுவார்களா?
-பாலா, அலமேலுமங்கைபுரம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சர்ச் 6-வது தெருவில் குப்பைகள் அதிக அளவில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை அகற்ற வேண்டும்.
-அரசு, காரைக்குடி.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அண்ணாநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மதுரை.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மஹால் பின்புறம் உள்ள ராமகிருஷ்ணா தெருவில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ேமலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
-வேல்பாண்டி, பரமக்குடி.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரேவதி, தேவகோட்டை.
நாய்கள் தொல்லை
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் பாண்டிநகர், செல்விநகர், ஆவின்நகர், மீனாட்சியம்மன் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் சுற்றி திரிகின்றன. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-சுந்தரராஜன், மதுரை.
Related Tags :
Next Story