மழைக்கால மீட்பு கருவிகளின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


மழைக்கால மீட்பு கருவிகளின் நிலை  குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2021 2:50 AM IST (Updated: 9 Nov 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

மழைக்கால மீட்பு கருவிகளின் நிலை என்ன என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். போலீசார் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளார்.

மதுரை, 
மழைக்கால மீட்பு கருவிகளின் நிலை என்ன என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். போலீசார் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளார்.
வடகிழக்கு பருவ மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொது மக்களை காப்பாற்றும் வகையில் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை தந்துள்ளது. மதுரை மாவட்டத்திற்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.
இந்தநிலையில், மதுரை ஆயதப்படை மைதானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, பேரிடர் கால மீட்பு காலத்தில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களின் செயல் பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்றுள்ள காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று ஆய்வு செய்தார். 
அப்போது, காற்றடித்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், வலுவான தூக்குப்படுக்கைகள், ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக் கவசம், மரம் அறுக்கும் எந்திரம், ஒலிபெருக்கி உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
உத்தரவு
மேலும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இந்த ஆய்வின்போது, மதுரை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஸ்வரன், இன்ஸ்பெக்டர் நாகதீபா உள்பட காவல்துறையின் கலந்து கொண்டனர்.
=====

Next Story